UPDATED : செப் 19, 2026 06:17 PM
ADDED : செப் 19, 2026 05:02 PM
அ நிறம் | அளவு
சென்னை:சென்னை எம்.ஜி.ஆர்., நகர் அய்யாவு மெயின் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர், 40. நேற்று முன்தினம் இரவு, இவரது வீட்டில் காஸ் சிலிண்டர் வெடித்து திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அசோக் நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள், அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
