/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடப்பாக்கம் கடலில் மூழ்கிய சிறுமி 5 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு
/
கடப்பாக்கம் கடலில் மூழ்கிய சிறுமி 5 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு
கடப்பாக்கம் கடலில் மூழ்கிய சிறுமி 5 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு
கடப்பாக்கம் கடலில் மூழ்கிய சிறுமி 5 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு
ADDED : ஜன 22, 2025 12:16 AM
செய்யூர்,
இடைக்கழிநாடு பேரூராட்சி, சேம்புலிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஹாசினி, 13, என்ற சிறுமி, கடந்த 17ம் தேதி மாலை குடும்பத்துடன், கடப்பாக்கம் முகத்துவாரம் பகுதியில் குளித்தார்.
அப்போது, கடலில் மூழ்கி மாயமானார்.
தகவலின்படி வந்த சூணாம்பேடு போலீசார், கடப்பாக்கம் பகுதி மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினருடன் இணைந்து சிறுமியை தேடி வந்தனர்.
சிறுமியை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கும்படி, கடந்த 19ம் தேதி காலை, அவரது உறவினர்கள், கிராம மக்கள் என 200க்கும் மேற்பட்டோர், கடப்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் செய்தனர்.
செய்யூர் தாசில்தார் சரவணன் பேச்சு நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக கூறியதும் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் நேற்று காலை, மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் பகுதியில் அடையாளம் தெரியாத சிறுமி சடலம் கடலில் மிதப்பதாக, மீனவர் ஒருவர்,'வாட்ஸாப்' குழுவில் சக மீனவர்களுக்கு புகைப்படத்துடன் தகவல் அளித்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த கடலோர காவல்படையினர், சிறுமி அணிந்திருந்த உடையை வைத்து, புகைப்படத்தில் இருப்பது அவர் தான் என உறுதி செய்து, அந்த இடத்திற்கு சென்று பார்த்தனர்.
ஆனால், சடலம் கடல் அலையில் வேறு இடத்திற்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர்ந்து தேடியதில், நேற்று மாலை 3:00 மணியளவில், பூம்புகார் அருகே பெருந்தோட்டம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு, கரைக்கு கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து, செங்கல்பட்டு மருத்துவமனைக்கு உடல் கொண்டு வரப்பட்டது. கடப்பாக்கம் கடலில் மூழ்கிய சிறுமி, 5 நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டது, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.