/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளாம்பாக்கம் நீரூற்று பூங்கா பெயர் பலகை: பெரிதாக அமைக்க வலியுறுத்தல்
/
கிளாம்பாக்கம் நீரூற்று பூங்கா பெயர் பலகை: பெரிதாக அமைக்க வலியுறுத்தல்
கிளாம்பாக்கம் நீரூற்று பூங்கா பெயர் பலகை: பெரிதாக அமைக்க வலியுறுத்தல்
கிளாம்பாக்கம் நீரூற்று பூங்கா பெயர் பலகை: பெரிதாக அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 02, 2026 05:12 AM

கிளாம்பாக்கம்:கிளாம்பாக்கம் நீரூற்று பூங்காவின் பெயர் பலகையை, கண்ணுக்கு தெரியும்படி அமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கிளாம்பாக்கத்தில், பேருந்து முனையம் அமைக்க, 2015ல் முடிவு செய்யப்பட்ட போது, அதன் அருகே இரு பூங்காக்கள் அமைக்கவும் தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி, பேருந்து முனையத்தின் வலது பக்கம், ஜி.எஸ்.டி., சாலையில் நுாற்றாண்டு பூங்காவும், இடதுபக்கம் ஜி.எஸ்.டி., சாலையில், நீரூற்று பூங்காவும் அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டது.
இதில், நுாற்றாண்டு பூங்கா 16 ஏக்கர் பரப்பில், 14 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு, 2024 டிச., 7ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
நீரூற்று பூங்கா, 6 ஏக்கர் பரப்பில், 12.8 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு, 2024 டிச., 30ம் தேதி மக்கள் பயன் பாட்டிற்கு திறக்கப்பட்டது.
இதில், நுாற்றாண்டு பூங்காவின் நுழைவு பகுதியில், பெரிய அளவிலான பெயர் பலகை அமைக்கப்பட்டதால், மக்களிடையே பிரபலமாகி, தற்போது 1,000க்கும் மேற்பட்டோர் தினமும் வந்து செல்கின்றனர்.
ஆனால், நீரூற்று பூங்கா முகப்பில், கண்ணுக்கு புலப்படும்படி பெயர் பலகை அமைக்கப்படவில்லை. இதனால், இப்படி ஒரு பூங்கா இருப்பது, பலருக்கும் தெரியவில்லை.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பேருந்து நிலையத்தின் வலது பக்கம் உள்ள காலநிலை பூங்கா, காலை 5:00 மணி முதல் 9:00 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.
ஆனால் நீரூற்று பூங்கா, காலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும். ஆனால், முகப்பு பெயர் பலகை பெரிய அளவில் இல்லாததால், பலருக்கும் இதுகுறித்து தெரிவதில்லை.
இப்பூங்காவில், குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக, ஆறு அடி நீரூற்று, இசை நீரூற்று, வானவில் நீரூற்று ஆகியவை உள்ளன. இரவு நேரத்தில், இந்த நீரூற்றுகள் உற்சாகமான மனநிலையை குழந்தைகளுக்கு தரும் .
எனவே, நீரூற்று பூங்காவின் முகப்பில், பெரிய அளவிலான பெயர் பலகை அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

