sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு

/

 அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு

 அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு

 அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு


ADDED : பிப் 20, 2026 05:53 AM

Google News

ADDED : பிப் 20, 2026 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்: ஒரத்தி அருகே கீழ்அத்திவாக்கம் பகுதியில், பள்ளி மாணவர்களால், அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மதுராந்தகம் போக்குவரத்து பணிமனையில் இருந்து தடம் எண் : டி12 பேருந்து, அச்சிறுப்பாக்கம் வழியாக ஒரத்தி வரை இயக்கப்படுகிறது.

நேற்று காலை 9:00 மணி அளவில், ஒரத்தியிலிருந்து பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் பயணியர்களுடன் புறப்பட்ட பேருந்து, கீழ் அத்திவாக்கம் பயணியர் நிறுத்தம் பகுதியில் காலை 9:10 க்கு வந்ததது.

அங்கு, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் பயணியர் பேருந்தில் ஏறி உள்ளனர். இதனால், படியில் தொங்கியவாறு பயணம் செய்தால் பேருந்தை இயக்க மாட்டோம், படியில் இருந்து இறங்குங்கள், கதவுகளை மூட வேண்டும் என, ஓட்டுநரிடம், நடத்துநர் தெரிவித்துள்ளார்.

இதனால், பேருந்தை நிறுத்தி, படியில் தொங்கி வரும் நபர்கள் இறங்கினால் பேருந்து இயக்கப்படும் எனக் கூறி, மாணவர்கள் மற்றும் பயணியர் சிலரை இறக்கி உள்ளனர்.

பின், பேருந்து கதவுகளை மூடிக்கொண்டு, பேருந்தை மதுராந்தகம் நோக்கி ஓட்டிச் சென்றுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த, பள்ளி மாணவர்கள் மற்றும் பேருந்து பயணியர் சிலர், கல் எடுத்து பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்து உள்ளனர்.

இதனால், அரசு பேருந்தில் பயணம் செய்த அனைவரையும், அத்திவாக்கம் பகுதியில் விட்டு ஒரத்தி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்த புகாரின்படி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us