/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு விரைவு பேருந்துகள் அடிக்கடி பழுதாகி பாதிப்பு
/
அரசு விரைவு பேருந்துகள் அடிக்கடி பழுதாகி பாதிப்பு
ADDED : மார் 04, 2024 06:41 AM

மாமல்லபுரம் : மாநில விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், சென்னையிலிருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு, தொலைதுார பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கடலோர சாலை வழியே, கும்பகோணம், மயிலாடுதுறை, நாகபட்டினம், வேதாரண்யம், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளுக்கு, விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அப்பேருந்துகள் முறையாக பராமரிக்காததால், அடிக்கடி வழியில் பழுதடைகின்றன. அதனால், நீண்டதுார பயணியர், குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.
அதனால், தனியார் நிறுவனங்களின் சொகுசு பேருந்துகளில், அதிக கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு, பயணியர் தள்ளப்படுகின்றனர்.
எனவே, அரசும் பயணியரை கவர, குளிர்சாதனம், படுக்கை வசதி உள்ள சொகுசு பேருந்துகளை, கடந்த 2020ல் அறிமுகப்படுத்தியது.
இப்பேருந்துகளும் முறையான பராமரிப்பு இல்லாததால், அடிக்கடி வழியிலேயே பழுதடைகின்றன. அதனால், பயணியர் பாதிக்கப்படுகின்றனர்.
நேற்று முன்தினம், வேளாங்கண்ணியிலிருந்து சென்னை சென்ற அரசு குளிர்சாதன விரைவுப் பேருந்து, கூவத்துார் அடுத்த காத்தங்கடை பகுதியில் பழுதாகி நின்றது.
பயணியர் நீண்டநேரம் காத்திருந்து, பயணியருடன் வந்த மற்றொரு விரைவு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறு அடிக்கடி நடப்பதாக, பயணியர் குமுறுகின்றனர்.

