/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு சட்ட கல்லுாரி ஆசிரியர்கள் மேம்பாட்டு திட்ட பயிற்சி நிறைவு
/
அரசு சட்ட கல்லுாரி ஆசிரியர்கள் மேம்பாட்டு திட்ட பயிற்சி நிறைவு
அரசு சட்ட கல்லுாரி ஆசிரியர்கள் மேம்பாட்டு திட்ட பயிற்சி நிறைவு
அரசு சட்ட கல்லுாரி ஆசிரியர்கள் மேம்பாட்டு திட்ட பயிற்சி நிறைவு
ADDED : ஜூன் 24, 2025 07:22 PM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரியில், ஆசிரியர் மேம்பாட்டுத் திட்ட பயிற்சி, கல்லுாரி வளாகத்தில் தொடர்ந்து ஏழு நாட்கள் நடந்தது.
'தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டக்கல்வி' என்ற தலைப்பில் நடைபெற்று வந்த இப்பயிற்சியில் சென்னை, புதுப்பாக்கம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளின் அரசு சட்டக் கல்லுாரிகளைச் சேர்ந்த 76 பேராசிரியர்கள் பங்கேற்றனர். இதில், சட்ட வல்லுநர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்று, பேராசிரியர்களுக்கு சட்டக்கல்வியை மேம்படுத்துதல், மாணவர்களுக்கு எளிய முறையில் எவ்வாறு பயிற்சி அளிப்பது போன்ற பல்வேறு பயிற்சிகளை அளித்தனர்.
நிறைவு விழாவில் சிறப்பு அழைப்பாளராக, தமிழ்நாடு சட்ட கல்வி இயக்குனர் விஜயலட்சுமி பங்கேற்று சிறப்புரையாற்றி, பயிற்சி முடித்த பேராசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
புதுப்பாக்கம் சட்ட கல்லுாரி முதல்வர் ஜெயகவுரி, தருமபுரி அரசு சட்டக் கல்லுாரி முதல்வர் உஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.