/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூவத்துாரில் மயான கொள்ளை இன்று துவக்கம்
/
கூவத்துாரில் மயான கொள்ளை இன்று துவக்கம்
ADDED : மார் 06, 2024 08:48 PM
கூவத்துார்:ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ் உள்ள கூவத்துார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மயான கொள்ளை உற்சவம், 10 நாட்கள் நடத்தப்படும்.
தற்போது, 112ம் ஆண்டாக, உற்சவம் நடக்கவுள்ளது. வரும் 7ம் தேதி இரவு, கிராம தேவதை செல்லியம்மனை வழிபட்டு துவக்கப்படுகிறது.
மறுநாள் காலை, கானத்துார் அங்காளம்மன் மீனவ பகுதி கடற்கரையில், அம்மன் கடலாடி உற்சவம் கண்டு, கூவத்துார் கோவிலில் இரவு கொடியேற்றப்படுகிறது.
வரும் 9ம் தேதி பகல், அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்து வழிபட்டு, மாலையில் அம்மன் மயானம் சென்று, வல்லாளன் வதம் செய்து, மயான கொள்ளை உற்சவம் நடக்கிறது.
வரும் 17ம் தேதி வரை, தினம் ஒரு சமூக மக்கள் சார்பில், தினமும் இரவு 7:00 மணிக்கு உற்சவம், 14ம் தேதி மாலை திருத்தேர் உற்சவம் நடக்கிறது.

