UPDATED : அக் 14, 2026 09:08 PM
ADDED : அக் 14, 2026 08:14 PM

அ நிறம் | அளவு
மறைமலை நகர்: காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், விவசாயிகளுக்கு பசுந்தீவனம் மதிப்பு கூட்டல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
மறைமலை நகர் அடுத்த காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், பசுந்தீவனம் மதிப்பு கூட்டல் பயிற்சி நேற்று நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
அப்போது, ஊறுகாய் புல் உற்பத்தி முதல் சந்தைப்படுத்தல், பசுந்தீவன பற்றாக்குறை காலங்களில் பயன்படுத்தும் முறை, அறுவடை முறைகள், சேமித்தல் உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
