/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் இன்று குறைதீர் கூட்டம்
/
செங்கையில் இன்று குறைதீர் கூட்டம்
ADDED : நவ 07, 2024 10:08 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், கூட்டுறவு பணியாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது.
செங்கல்பட்டு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் நந்தகுமார் அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சங்கங்களில் பணியாற்றி வரும் பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கான பணி தொடர்பான குறைகளுக்கு தீர்வு காணும் வகையில், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் மூன்றாவது மாடியில், செங்கல்பட்டு மண்டல இணை பதிவாளர் அலுவலக கூட்ட அரங்கில், மண்டல இணை பதிவளர் மற்றும் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் உள்ளிட்டோர் தலைமையில், இன்று காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
எனவே, பணியாளர்கள் தங்கள் பணி தொடர்பாகவும், பணியின்போது வேறு வகையில் ஏற்படும் குறைகள் தொடர்பாகவும் மனுக்கள் அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.