/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறைதீர்வு கூட்டம் 387 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர்வு கூட்டம் 387 மனுக்கள் ஏற்பு
ADDED : ஜன 20, 2025 11:40 PM
செங்கல்பட்டு, செங்கல்பட்டில், நேற்று நடந்த வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 387 மனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளன.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது.
இதில் மகளிர் உரிமைத்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், திருத்தம், வேலைவாய்ப்பு, தொழில் துவங்க வங்கிகடன், கலைஞர் கனவு இல்ல வீடு, விவசாய நிலம் பாசனத்திற்கு இலவச மின்சாரம், சாலை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 387 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார். அதன் பின், மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு, 66,000 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் வழங்கினார்.