/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மளிகை கடையை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு
/
மளிகை கடையை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு
ADDED : ஏப் 13, 2025 08:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்களத்துார்:புதுபெருங்களத்துார், சக்தி நகர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் ருத்ராஸ்ரீ, 41. அப்பகுதியில், மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றார்.
நேற்று காலை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது, கல்லா பெட்டியில் இருந்த, 5,000 ரூபாய் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்படி, பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.