ADDED : மார் 18, 2026 06:09 AM

அ நிறம் | அளவு
அச்சிறுபாக்கம்: கடமலைப்புத்துாரில் மேம்பாலத்தின் பக்கவாட்டில் வளர்ந்துள்ள அரச மரக்கன்றை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அச்சிறுபாக்கம் அருகே கடமலைப்புத்துார் பகுதியில் சென்னை -- - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
இச்சாலையில் தொழிப்பேடு பகுதியில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் அரச மரக்கன்று வளர்ந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், அந்த அரச மரக்கன்றை வேருடன் அகற்றாமல், அதன் கிளைகளை மட்டும் வெட்டி விடுகின்றனர். இதனால், மேம்பாலத்தின் உறுதி தன்மை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரச மரக்கன்றை வேருடன் அகற்றி, மேம்பாலத்தை பராமரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
