/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அகற்றப்பட்ட பேருந்து நிழற்குடைகள் ஜி.எஸ்.டி., சாலையில் பயணியர் தவிப்பு
/
அகற்றப்பட்ட பேருந்து நிழற்குடைகள் ஜி.எஸ்.டி., சாலையில் பயணியர் தவிப்பு
அகற்றப்பட்ட பேருந்து நிழற்குடைகள் ஜி.எஸ்.டி., சாலையில் பயணியர் தவிப்பு
அகற்றப்பட்ட பேருந்து நிழற்குடைகள் ஜி.எஸ்.டி., சாலையில் பயணியர் தவிப்பு
ADDED : ஜன 20, 2025 01:50 AM

கூடுவாஞ்சேரி,:பெருங்களத்துார், வண்டலுார், ஊரப்பாக்கம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி, சீனிவாசபுரம், தைலாவரம், மறைமலைநகர் உள்ளிட்ட ஜி.எஸ்.டி., சாலையில் இருபுறமும் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல், பேருந்து பயணியர் அவதியடைந்து வருகின்றனர்.
பெருங்களத்துார் முதல் செங்கல்பட்டு வரை உள்ள, ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறமும், பேருந்து நிறுத்தத்தில், பயணியருக்கான நிழற்குடைகள் இல்லை. இந்த பேருந்து நிறுத்தங்களில், சில ஆண்டுகளுக்கு முன் நிழற்குடை இருந்தது.
நெடுஞ்சாலை துறையினர் சாலையை அகலப்படுத்தி, பராமரிப்பு பணி மேற்கொண்டதால், அங்கிருந்த நிழற்குடைகளை முற்றிலுமாக அகற்றினர்.
சாலை பணிகளை நிறைவு செய்து, ஓராண்டுக்கு மேலாகியும், அகற்றப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடைகளை மீண்டும் அமைக்கவில்லை.
அந்த வகையில், வண்டலுார் பேருந்து நிறுத்தத்தில் இருந்த நிழற்குடை அகற்றப்பட்ட நிலையில், தற்போது உயிரியல் பூங்காவிற்கு வரும் பயணியர், சாலையில் ஆபத்தான முறையில் பேருந்திற்காக காத்திருக்கின்றனர்.
குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் வெயில், மற்றும் மழைக்காலங்களில் அவதிப்படுகின்றனர்.
அதேபோன்று, நந்திவரம் அரசு மருத்துவமனை முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்தில், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள்,
கர்ப்பிணியர் உள்ளிட்டோர், பேருந்துக்காக சாலையோரம் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் மழையில் நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பெருங்களத்துார் முதல் செங்கல்பட்டு வரை உள்ள பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடைகள் அமைப்பதற்கு, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.