/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஜி.எஸ்.டி., சாலையில் பள்ளங்கள் கூடுவாஞ்சேரியில் பயணியர் அவதி
/
ஜி.எஸ்.டி., சாலையில் பள்ளங்கள் கூடுவாஞ்சேரியில் பயணியர் அவதி
ஜி.எஸ்.டி., சாலையில் பள்ளங்கள் கூடுவாஞ்சேரியில் பயணியர் அவதி
ஜி.எஸ்.டி., சாலையில் பள்ளங்கள் கூடுவாஞ்சேரியில் பயணியர் அவதி
ADDED : பிப் 07, 2024 09:57 PM

மறைமலை நகர்:திருச்சி --- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை, தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலை.
இந்த சாலையில், கடந்த பருவமழையின் போது பெய்த கனமழையின் காரணமாக, ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில், பல இடங்களில் பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து, இருசக்கர வாகன ஓட்டிகள் கூறியதாவது:
கூடுவாஞ்சேரி பகுதியில், சீனிவாசபுரம், தைலாவரம், சிக்னல், கூடுவாஞ்சேரி காவல் நிலையம் எதிரில் என, பல இடங்களில் மரண பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இருசக்கர வாகனங்களை இயக்க மிகவும் அச்சமாக உள்ளது.
எனவே, இந்த பள்ளங்களை சீரமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நெடுஞ்சாலையின் இருபுறமும் மணல் திட்டுகள் குவிந்து கிடப்பதால், வாகன ஓட்டிகள் வழுக்கி விழும் நிலை உள்ளது.
மணல் துகள்கள் காற்றில் பறந்து, வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன. எனவே, இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

