/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஜி.எஸ்.டி., சாலை பேரமனுாரில் சிக்னல் அமைக்கப்படாத அவலம்
/
ஜி.எஸ்.டி., சாலை பேரமனுாரில் சிக்னல் அமைக்கப்படாத அவலம்
ஜி.எஸ்.டி., சாலை பேரமனுாரில் சிக்னல் அமைக்கப்படாத அவலம்
ஜி.எஸ்.டி., சாலை பேரமனுாரில் சிக்னல் அமைக்கப்படாத அவலம்
ADDED : பிப் 13, 2025 01:18 AM

மறைமலை நகர்,:திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலை தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலை.இந்த சாலையில் கூடுவாஞ்சேரி - மகேந்திரா சிட்டி வரை எட்டு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
தற்போது பணிகள் நிறைந்து வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்ற போது சாலை சந்திப்புகளில் இருந்த அனைத்து சிக்னல்களும் அகற்றப்பட்டன.
பணிகள் நிறைவு அடைந்த பகுதிகளில் மீண்டும் சிக்னல் அமைக்கப்படாததால் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வந்தன.
குறிப்பாக மறைமலைநகர் பேரமனூர் போர்டு கார் தொழிற்சாலை சந்திப்பில் அதிக அளவில் சாலையை கடக்கும் பாதசாரிகள் விபத்தில் சிக்கி வந்தனர். அடிக்கடி உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெற்று வந்தன.
எனவே இந்த பகுதியில் சிக்னல் அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, மறைமலைநகர் நகராட்சி சார்பில்
நமக்கு நாமே திட்டம் 2023-- 24ம் கீழ் பொது மக்கள் பங்களிப்பு நிதி 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சேர்த்து 7 லட்ச ரூபாய் மதிப்பில் இந்த பகுதியில் சிக்னல் அமைக்க கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
'டெண்டர்' விடப்பட்டு துவங்கப்பட்ட பணிகள் ஏழு மாதங்கள் கடந்தும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன.
இதன் காரணமாக சாலையை கடந்து செல்லும் மக்கள் அச்ச உணர்வுடன் செல்லும் நிலை தொடர்கின்றது. எனவே போக்குவரத்து சிக்னல் அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

