/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி
/
பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி
ADDED : மே 20, 2025 12:29 AM

பவுஞ்சூர்,பிளஸ் - 2 முடித்த பள்ளி மாணவ - மாணவியருக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, பவுஞ்சூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில், செய்யூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாபு தலைமையில் நேற்று நடந்தது.
இதில், மாணவ - மாணவியரின் திறனுக்கு ஏற்ப பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், பாராமெடிக்கல் போன்ற பல்வேறு வகையான உயர்கல்வி பயில்வது குறித்து விளக்கப்பட்டது.
மேலும், உயர் கல்விக்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான சான்றிதழ்களை பெறுவதற்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.
இங்கு, தனியார் கல்லுாரிகள் சார்பாக, அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவர்களிடம் மாணவ - மாணவியர், உயர்கல்வி குறித்த சந்தேகங்களை கேட்டறிந்தனர்.
செய்யூர் வட்டத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற, நான்கு மாணவியருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.