/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பங்காரு அடிகளாருக்கு குருபூஜை
/
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பங்காரு அடிகளாருக்கு குருபூஜை
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பங்காரு அடிகளாருக்கு குருபூஜை
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பங்காரு அடிகளாருக்கு குருபூஜை
ADDED : அக் 19, 2025 09:26 PM

மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீட, பங்காரு அடிகளாரின் இரண்டாம் ஆண்டு குருபூஜை விழா, நேற்று நடைபெற்றது.
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீட பங்காரு அடிகளாரின் இரண்டாம் ஆண்டு குரு பூஜை விழாவை முன்னிட்டு, கலச விளக்கு வேள்வி பூஜை, கடந்த 18ம் தேதி துவங்கியது.
இதைத்தொடர்ந்து, ஆதிபராசக்தி அம்மன், பங்காரு அடிகளார் திருவுருவ சிலைக்கு மேலதாளங்களுடன், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு, நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, ஆதிபராசக்தி அம்மன், பங்காரு அடிகளார் திருவுருவ சிலைக்கு கற்பூரம் ஏற்றி, லட்சுமி பங்காரு அடிகளார் வழிபாடு செய்தார்.
இதில், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார், ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை மாவட்ட நீதிபதி செல்வம், ரயில்வே அதிகாரி செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அதைத்தொடர்ந்து, நீண்ட வரிசையில் வந்த செவ்வாடை பக்தர்கள், பங்காரு அடிகளார் திருவுருவ சிலையை வணங்கினர். தொடர்ந்து, சித்தர் பீட வளாகத்தில், தங்கத்தேர் பவனி நடந்தது.
இந்த விழாவில், தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்றனர். சித்தர் பீடம் சார்பில் செவ்வாடை பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கினர்.
விழா ஏற்பாடுகளை, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மற்றும் கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் செய்திருந்தனர்.