/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஒரே இரவில் 3 கோவில்களில் கைவரிசை
/
ஒரே இரவில் 3 கோவில்களில் கைவரிசை
ADDED : பிப் 17, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பத்துார்:அம்பத்துார் அடுத்த சூரப்பட்டு, மேட்டூரில் சீனிவாச பெருமாள் கோவில், எல்லை அம்மன் கோவில், எழில் நகரில் விநாயகர் கோவில்கள் உள்ளன.
வழக்கம்போல, நேற்று காலை அர்ச்சகர்கள் கோவில் நடைதிறக்க சென்றனர். அப்போது மூன்று கோவில்களின் பூட்டு மற்றும் உண்டியல்கள் உடைக்கப்பட்டிருந்தன.
அதில் இருந்த காணிக்கை பணம் மற்றும் 2 சவரன் சுவாமி நகைகளும் திருட்டு போனது தெரிய வந்தது. ஒரே இரவில், மூன்று கோவில்களில் மர்மநபர்கள் கைவரிசை காட்டியது, பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து அம்பத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.