/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முடிவுற்ற பணிகள் பயன்பாட்டுக்கு ஒப்படைப்பு
/
முடிவுற்ற பணிகள் பயன்பாட்டுக்கு ஒப்படைப்பு
ADDED : மே 21, 2025 08:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட, ஐந்தாவது வார்டு சாத்தனுார் பகுதியில், 10.74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 10,000 லிட்டர் கொள்ளளவில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
மதுராந்தகம் -- அருங்குணம் சாலையில், காந்திநகர் பகுதியில், 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பயணியர் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது.
இவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, மதுராந்தகம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மரகதம் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் நகராட்சி பொறியாளர், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.