/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெரும்பேர்கண்டிகை கழிப்பறை பயன்பாட்டிற்கு ஒப்படைப்பு
/
பெரும்பேர்கண்டிகை கழிப்பறை பயன்பாட்டிற்கு ஒப்படைப்பு
பெரும்பேர்கண்டிகை கழிப்பறை பயன்பாட்டிற்கு ஒப்படைப்பு
பெரும்பேர்கண்டிகை கழிப்பறை பயன்பாட்டிற்கு ஒப்படைப்பு
ADDED : நவ 23, 2024 01:03 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டு, பெரும்பேர்கண்டிகை ஊராட்சி உள்ளது. இங்கு, நேற்று உலக கழிப்பறை தினத்தை ஒட்டி, ஊராட்சி தலைவர் சாவித்ரி தலைமையில், விழிப்புணர்வு இயக்கம் நடந்தது.
இதில், 'நமது கழிப்பறை; நமது கவுரவம்' எனும் கருப்பொருளின் அடிப்படையில், கிராம பொது மக்களுக்கும், மகளிர் குழு உறுப்பினர்களுக்கும், கழிப்பறை பயன்படுத்துதல் மற்றும் துாய்மையை பேணிக்காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், துாய்மை பாரத இயக்கம் 2022 -- 23ல், 6.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமூக சுகாதார வளாகத்தை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் திறந்து வைத்தார்.
பின், தனிநபர் கழிப்பறை கட்டுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு நபர்களுக்கு பணி ஆணை வழங்கினார்.
இந்நிகழ்வில், வட்டார ஒருங்கிணைப்பாளர் ரகுநாதன், ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சி துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

