மாணவியிடம் சீண்டிய தலைமையாசிரியர் ‘போக்சோ’வில் கைது
மாணவியிடம் சீண்டிய தலைமையாசிரியர் ‘போக்சோ’வில் கைது
ADDED : செப் 25, 2026 08:11 PM
அ நிறம் | அளவு
மாமல்லபுரம்: மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த 52 வயது தலைமை ஆசிரியர், ‘போக்சோ‘ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருப்போரூர் பகுதியை சேர்ந்தவர் தாமஸ் மனோகரன், 52; அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிகிறார்.
இவர், சில நாட்களுக்கு முன் அதே பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
மாணவியின் பெற்றோர் திருப்போரூர் சிங்கப்பெண் படை போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில், தலைமை ஆசிரியர் தாமஸ் மனோகரன் பாலியல் தொல்லை தந்தது உறுதியானது. இதையடுத்து, மாமல்லபுரம் மகளிர் போலீசார், அவரை ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
