/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.30 லட்சத்தில் சுகாதார மைய கட்டடம்
/
ரூ.30 லட்சத்தில் சுகாதார மைய கட்டடம்
ADDED : செப் 22, 2024 08:19 PM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த தண்டலம் ஊராட்சியில் அடங்கிய மேட்டுதண்டலம் கிராமத்தில், ஊராட்சி நிர்வாகம், கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனை இணைந்து, இலவச மருத்துவ சேவையை வழங்கி வருகின்றன.
இச்சேவை, தற்காலிகமாக வாடகை கட்டடத்தில் செயல்படுவதால், போதிய வசதிகளுடன் சொந்த கட்டடம் கட்ட ஊராட்சி நிர்வாகம், அதே பகுதியில் இயங்கும் தனியார் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தது.
இதையடுத்து, பொதுமக்களின் சுகாதார பயன்பாட்டிற்காக, தனியார் நிறுவனம் சார்பில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய சுகாதார கட்டடம் கட்டித்தர முடிவு செய்து.
அதன்படி, இதற்கான கட்டுமான பணிகள், கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி பூமி பூஜையுடன் துவங்கப்பட்டு, தற்போது அனைத்து கட்டுமான பணிகளும் முடிந்து, தயார் நிலையில் உள்ளது. விரைவில், இந்த புதிய கட்டடத்தில், இலவச மருத்துவ சேவை செயல்பட உள்ளது.