/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பிறப்பு சான்றிதழ் திருத்தம் செய்ய லஞ்சம் சுகாதார ஆய்வாளருக்கு 2 ஆண்டு சிறை
/
பிறப்பு சான்றிதழ் திருத்தம் செய்ய லஞ்சம் சுகாதார ஆய்வாளருக்கு 2 ஆண்டு சிறை
பிறப்பு சான்றிதழ் திருத்தம் செய்ய லஞ்சம் சுகாதார ஆய்வாளருக்கு 2 ஆண்டு சிறை
பிறப்பு சான்றிதழ் திருத்தம் செய்ய லஞ்சம் சுகாதார ஆய்வாளருக்கு 2 ஆண்டு சிறை
ADDED : நவ 27, 2024 09:46 PM
செங்கல்பட்டு:பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்ய லஞ்சம் வாங்கிய வழக்கில், சுகாதார ஆய்வாளருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, செங்கல்பட்டு கோர்ட், நேற்று தீர்ப்பளித்தது.
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்தவர் உசேன் பாஷா என்பவர், 1996, ஏப்ரல் 3ல் பிறந்த தன் மகன் மாலிக் பாஷாவுக்கு பிறப்பு சான்றிதழ் கேட்டு, செங்கல்பட்டு நகராட்சி அலுவலகத்தில், சுகாதார ஆய்வாளரிடம் மனு செய்தார்.
இந்த மனுவை பரிசீலனை செய்த சுகாதார ஆய்வாளர், மாலிக் பாஷா 1996, ஏப்ரல் 2ம் தேதி பிறந்ததாக, தவறுதலாக பிறப்பு சான்றிதழை வழங்கியுள்ளார்.
அதன்பின், மகன் தனியார் மருத்துவமனையில் பிறந்த தேதிக்கான சான்றிதழ் பெற்று, நகராட்சியில் தவறாக வழங்கிய மகனின் பிறப்பு சான்றிதழை இணைத்து, 2014, மே 15ல், சுகாதார ஆய்வாளர் பால்டேவிஸ், 50, என்பவரிடம் மனு செய்தார்.
ஆனால், பிறந்த தேதியை மாற்றித் தர, சுகாதார ஆய்வாளர் பால்டேவிஸ், 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். அதன்பின், 7,000 ரூபாய் கொடுத்தால், சான்றிதழ் வழங்க முடியும் என, சுகாதார ஆய்வாளர் கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத உசேன் பாஷா, சென்னை லஞ்ச ஒழிப்பு போசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரசாயனம் தடவிய 7,000 ரூபாயை, உசேன் பாஷாவிடம் போலீசார் கொடுத்து அனுப்பினர்.
நகராட்சி அலுவலகத்தில், சுகாதார ஆய்வாளர் பால்டேவிஸிடம் பணத்தை கொடுத்த போது, மறைந்திருந்த போலீசார் மடக்கிப் பிடித்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இருந்த இவ்வழக்கு, செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில் நடந்து வந்தது.
விசாரணை முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்டதால், பால்டேவிஸ்க்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி ஜெயஸ்ரீ நேற்று தீர்ப்பளித்தார்.