/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.57 லட்சத்தில் சுகாதார அலகு கட்டடம் தயார்
/
ரூ.57 லட்சத்தில் சுகாதார அலகு கட்டடம் தயார்
ADDED : நவ 28, 2024 11:58 PM
திருப்போரூர்,
திருப்போரூர் வட்டாரத்தில், கேளம்பாக்கம், செம்பாக்கம், சிறுங்குன்றம், மானாமதி ஆகிய நான்கு பகுதிகளில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையின் ஆரம்ப சுகாதார நிலையங்களும், 25 துணை சுகாதார நிலையங்களும் உள்ளன.
இத்துறை சார்பில், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு, மருத்துவ சேவை மற்றும் தொற்று நோய்களின் அபாயங்களிலிருந்து பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், பொது சுகாதார ஆய்வக சேவைக்காக, கேளம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், வட்டார சுகாதார அலகு கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில், 57.31 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக வட்டார சுகாதார அலகு கட்டடம் கட்டும் பணி நிறைவடைந்து, தற்போது திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.

