/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் இதய நோய் விழிப்புணர்வு பேரணி
/
செங்கையில் இதய நோய் விழிப்புணர்வு பேரணி
ADDED : அக் 01, 2024 12:25 AM
செங்கல்பட்டு- செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள இருதய பிரிவு சார்பில், உலக இருதய தினத்தையொட்டி, விழிப்புணர்வு பேரணியை, கல்லுாரி முதல்வர் ஜோதிகுமார், நேற்று துவக்கி வைத்தார்.
மருத்துவமனை வளாகத்தில் துவங்கிய பேரணி, ஜி.எஸ்.டி., சாலை வழியாக சென்று, மருத்துவமனையில் நிறைவுபெற்றது.
இதய நோய் குறித்து, டாக்டர் பாண்டியன் தலைமையில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. டாக்டர்கள் சுரேஷ்குமார், ரகோத்தமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மருத்துவமனையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், 4,500 பேருக்கு அஞ்சியோ சிகிச்சைகளும், 950 பேருக்கு அஞ்சியோ பிளாஸ்ட்டி பொருத்தும் சிகிச்சையும் இலவசாக செய்யப்பட்டது.
இதய நோய் வராமல் தடுக்க, சர்க்கரை வியாதி, ரத்தக்கொதிப்பு, ரத்தத்தில் கொழுப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.
உடல் பருமன் குறைத்தல், புகைபிடிப்பதை தவிர்க்கவும் வலியுறுத்தப்பட்டது. தினமும், சிறிது நேர உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு போன்ற நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என, துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.