/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்காடு - திருப்போரூர் சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு அவசியம் வாகன ஓட்டிகள் கோரிக்கை

ADDED : அக் 06, 2025 11:26 PM

திருப்போரூர்,செங்காடு - திருப்போரூர் சாலை சந்திப்பில், உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்போரூரிலிருந்து செங்காடு செல்லும் சாலை, 3 கி.மீ., துாரம் கொண்டது. இதில், 1 கி.மீ., சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், அந்த இடத்தில் சாலை சேதமடைந்து, மோசமான நிலையில் இருந்தது.
இச்சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து சமீபத்தில், வனத்துறை அனுமதி பெற்று மேற்கண்ட சாலை, 52.91 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டது. இந்த சாலையின் வழியாக, மேட்டுக்குப்பம் கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் மற்றும் கோமா நகர், தையூர், காயார் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு மக்கள் செல்கின்றனர்.
மேற்கண்ட சாலை சந்திப்பில், மின் விளக்கு இல்லாததால், இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, செங்காடு - திருப்போரூர் சாலை சந்திப்பில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.