/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெடுஞ்சாலையில் விளம்பர பதாகைகள் நெடுஞ்சாலை துறையினர் அலட்சியம்
/
நெடுஞ்சாலையில் விளம்பர பதாகைகள் நெடுஞ்சாலை துறையினர் அலட்சியம்
நெடுஞ்சாலையில் விளம்பர பதாகைகள் நெடுஞ்சாலை துறையினர் அலட்சியம்
நெடுஞ்சாலையில் விளம்பர பதாகைகள் நெடுஞ்சாலை துறையினர் அலட்சியம்
ADDED : ஜூன் 09, 2025 02:39 AM

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலை, 25 கி.மீ., துாரம் கொண்டது. இந்த சாலையில் தினமும், 40,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
மேலும் கொளத்துார், ஆப்பூர், ஒரகடம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த சாலையில் சென்று வருகின்றனர்.
ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் பகுதியிலுள்ள தொழிற்சாலைகளுக்குச் செல்லும் கனரக வாகனங்களும், தினமும் இச்சாலையில் சென்று வருகின்றன.
இந்த நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே மேம்பாலத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை வளைவு, குறுகலான சாலை, விபத்து பகுதிகள் குறித்து வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில், குறியீடு பலகைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மின் கம்பங்களிலும், இதுபோன்ற அறிவிப்புகள் உள்ளன.
கடந்த சில மாதங்களாக, இந்த எச்சரிக்கை பலகைகள் மற்றும் மின் கம்பங்களில், தனியார் நிறுவனங்களின் விளம்பர பதாகைகள், கட்டப்பட்டு உள்ளன.
இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில், வாகன ஓட்டிகள் கவனச்சிதறல் அடையும் வகையிலும், காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் மீதும் விழும் வகையிலும், மின் கம்பங்கள் மீது பதாகைகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த சாலையில் முக்கிய பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள விளம்பர பதாகைகள் மற்றும் விளம்பர பலகைகள் அபாய நிலையில் உள்ளன.
பல இடங்களில் இந்த பதாகைகள், சாலையின் நடுவே அறுந்து தொங்குகின்றன. இவை வாகன ஓட்டிகளை விபத்தில் சிக்க வைக்கும். இந்த பதாகைகளை அகற்ற, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.