/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உயர்கோபுர மின் விளக்கு பழுது கண்டுகொள்ளாத நெடுஞ்சாலை துறை
/
உயர்கோபுர மின் விளக்கு பழுது கண்டுகொள்ளாத நெடுஞ்சாலை துறை
உயர்கோபுர மின் விளக்கு பழுது கண்டுகொள்ளாத நெடுஞ்சாலை துறை
உயர்கோபுர மின் விளக்கு பழுது கண்டுகொள்ளாத நெடுஞ்சாலை துறை
ADDED : ஜூன் 04, 2025 01:03 AM

செங்கல்பட்டு:திருப்போரூர் கூட்டு சாலையில், பழுதடைந்துள்ள உயர்கோபுர மின் விளக்கை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு அடுத்த வல்லம் ஊராட்சியில், திருப்போரூர் கூட்டுச் சாலையில், 2012ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறையினர் உயர்கோபுர மின் விளக்கு அமைத்தனர்.
துவக்கத்தில் மின் விளக்கு பராமரிக்கப்பட்டு வந்த போது, மக்கள் அச்சமின்றி சென்று வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக, உயர்கோபுர மின் விளக்கு எரியாததால், சாலை விபத்துகள் மற்றும் வழிப்பறி, வீடு புகுந்து திருட்டு, சாலையில் நடந்து செல்லும் இளம்பெண்களை பாலியல் ரீதியாக மர்ம நபர்கள் சீண்டுவது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க, பழுதடைந்துள்ள உயர் கோபுர மின்விளக்கை சரிசெய்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசனிடம், ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்காமல், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.
பெரும் அசம்பாவிதம் நடப்பதற்குள், உயர்கோபுர மின் விளக்கை பழுது பார்த்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந் கோரிக்கை வலுத்துள்ளது.