ADDED : டிச 08, 2025 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் துாணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக, ஹிந்து முன்னணியினர் நேற்று, திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பொதுச்செயலர் ராஜசேகர் தலைமையில், பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் துாணில் தீபம் ஏற்ற, நீதிமன்றம் அளித்த உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியதாகக் கூறி, ஹிந்து சமய அறநிலையத் துறையை கண்டித்தும், முருக பெருமானை தரிசிக்க சென்ற பக்தர்களை கைது செய்ததாகவும் கோஷம் எழுப்பி, ஆர்ப்பாட்டம் செய்தனர்.
போலீசார் அவர்களை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் வைத்து, பின்னர் விடுவித்தனர்.

