/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புத்திரன்கோட்டை வார சந்தையை மீண்டும் செயல்படுத்த எதிர்பார்ப்பு
/
புத்திரன்கோட்டை வார சந்தையை மீண்டும் செயல்படுத்த எதிர்பார்ப்பு
புத்திரன்கோட்டை வார சந்தையை மீண்டும் செயல்படுத்த எதிர்பார்ப்பு
புத்திரன்கோட்டை வார சந்தையை மீண்டும் செயல்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 13, 2025 07:54 PM
சித்தாமூர்:கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட புத்திரன்கோட்டை வாரச் சந்தையை, மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுப் பகுதி கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புத்திரன்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான நுகும்பல், போந்துார், கல்பட்டு, ஈசூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், 15,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
சித்தாமூர் சுற்றுவட்டார பகுதிகளான மதுராந்தகத்தில் திங்கட்கிழமையும், செய்யூரில் வியாழக்கிழமையும், பவுஞ்சூரில் புதன் கிழமையும், கூவத்துாரில் சனிக்கிழமையும், வாரச் சந்தை நடப்பது வழக்கம்.
இதேபோல, வெள்ளிக்கிழமையில் புத்திரன்கோட்டை பகுதியில் வாரச் சந்தை நடந்து வந்தது.
சுற்று வட்டாரங்களில் வசிக்கும் விவசாயிகள், தங்கள் நிலத்தில் விளைந்த காய்கறிகள், கீரைகள், கிழங்கு வகைகளை புத்திரன்கோட்டை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வர். மீனவர்கள் மீன், நண்டு, இறால், கருவாடு போன்றவற்றை இந்த சந்தைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர்.
கொரோனா காலத்தில், புத்திரன்கோட்டை சந்தை நடத்துவது நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் செயல்படாமல் உள்ளது.
இதனால் விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகள், கீரைகள், கிழங்கு வகைகளை விற்க சிரமப்படுகின்றனர். மேலும் மீனவர்கள், கடல்சார் உணவுப்பொருட்களை விற்பனை செய்யவும் சிரமப்படுகின்றனர்.
பொதுமக்களின் நலன் கருதி, புத்திரன்கோட்டை சந்தையை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் செயல்படுத்த வேண்டும். இதனால், ஊராட்சிக்கு வருவாய் ஈட்ட முடியும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.