/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விபத்தில் கணவர் பலி மனைவி 'அட்மிட்'
/
விபத்தில் கணவர் பலி மனைவி 'அட்மிட்'
ADDED : ஜூன் 12, 2025 11:13 PM
அச்சிறுபாக்கம்:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பெரிய கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், 25.இவரது மனைவி மேரி ஜாஸ்மின், 23.
தம்பதி நேற்று, திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு வேலைக்குச் செல்வதற்காக, தங்களுக்கு சொந்தமான,'ஹீரோ ஹோண்டா ஸ்பிலெண்டர் பிளஸ்' இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஆத்துார் சுங்கச்சாவடி அருகே சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி உள்ளது.
இதில் நிலை தடுமாறி, இருசக்கர வாகனத்தில் இருந்து தம்பதி கீழே விழுந்தனர். இதில், சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது மனைவி, சிறு காயங்களுடன் மீட்கப்பட்டு, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அச்சிறுபாக்கம் போலீசார், சுரேஷ் உடலை கைப்பற்றி, மதுராந்தகம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இகுகுறித்து, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.