ADDED : மார் 19, 2026 05:56 AM

அ நிறம் | அளவு
திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள ஜும்மா பள்ளிவாசலில், அ.தி.மு.க., செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று முன் தினம் மாலை நடந்தது.
இதில், 500க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டு நோன்பு திறந்தனர்.
நோன்பு கஞ்சி உள்ளிட்ட சிற்றுண்டி மற்றும் தாகம் தணிக்கும் வகையில் குளிர்பானங்கள், பழங்களும் பரிமாறி கொண்டனர். இதில், அ.தி.மு.க., நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
