ADDED : அக் 22, 2025 11:00 PM

கூ டுவாஞ்சேரி அடுத்த, காயரம்பேடு ஊராட்சி, விஷ்ணுபிரியா நகரில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதியில், ஆண்டுதோறும் வடகிழக்கு பருவ மழையின் போது, குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்வது வழக்கம். கடந்த சில நாட்களாக பெய்த மழையில், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பெருமாட்டு நல்லுார் கூட்டுச்சாலையில் மழைநீர் தேங்கி உள்ளதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இப்பகுதிகளை கலெக்டர் சினேகா, நேற்று ஆய்வு செய்து, மழைநீரை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது, தாசில்தார் ஆறுமுகம், காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு, மதுராந்தகம் தாலுகாவில் ஐந்து குடிசை வீடுகள், திருக்கழுக்குன்றம் தாலுகாவில் இரண்டு, செங்கல்பட்டு தாலுகாவில் ஒரு குடிசை வீடு என, எட்டு குடிசை வீடுகள், நேற்று இடிந்து விழுந்தன. அண்டவாக்கத்தில், ஒரு பசு இறந்துள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.