/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆளவந்தார் கோவில் குளம் மேம்பாட்டு பணி துவக்கம்
/
ஆளவந்தார் கோவில் குளம் மேம்பாட்டு பணி துவக்கம்
ADDED : மார் 11, 2024 11:30 PM

நெம்மேலி,- மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி பகுதியில், ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ், ஆளவந்தார் திருவரசு கோவில் உள்ளது.
இக்கோவிலை, கடந்த 1967ல் அமைத்து, அவரது கற்சிலை பிரதிஷ்டை செய்து, 55 ஆண்டுகளாக வழிபாட்டில் உள்ளது. அவர் மறைந்த ஆடி பூரட்டாதி நட்சத்திர நாளில், ஆண்டுதோறும் குருபூஜை உற்சவம் நடத்தி, அன்னதானம் வழங்கப்படுகிறது.
நாளடைவில், கோவில் பலமிழந்ததால், புதிய கோவில் அமைக்க, அறநிலையத்துறை முடிவெடுத்து, கடந்த 2022ல் சட்டமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜனவரியில் பாலாலயம் செய்து, 84 லட்சம் ரூபாய் மதிப்பில், திருப்பணிகள் துவக்கப்பட்டன. அவ்வளாகத்தில் உள்ள பழங்கால குளத்தை, நீண்ட காலமாக துார்வாரி பராமரிக்காததால், முற்றிலும் துார்ந்து சீரழிந்தது.
அதனால், ஆளவந்தார் அறக்கட்டளை நிர்வாகம், குளத்தையும் துார்வாரி ஆழப்படுத்தி, நான்கு புற கரையில் மண் சரியாமல் தடுக்க, கருங்கல் தளமும் அமைத்து, தற்போது மேம்படுத்தி வருகிறது.

