/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எரிக்கப்படும் குப்பை கழிவுகள் பள்ளி குழந்தைகளுக்கு பாதிப்பு
/
எரிக்கப்படும் குப்பை கழிவுகள் பள்ளி குழந்தைகளுக்கு பாதிப்பு
எரிக்கப்படும் குப்பை கழிவுகள் பள்ளி குழந்தைகளுக்கு பாதிப்பு
எரிக்கப்படும் குப்பை கழிவுகள் பள்ளி குழந்தைகளுக்கு பாதிப்பு
ADDED : செப் 26, 2024 12:36 AM

மறைமலை நகர்:செங்கல்பட்டு - தாம்பரம் பழைய ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தை சுற்றி, செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள், தனியார் பள்ளி உள்ளிட்டவை உள்ளன.
இங்கு சேகரமாகும் குப்பை கழிவுகள், இதே பகுதியில் உள்ள பழங்கால அகழியில் கொட்டப்பட்டு, தினமும் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றன. இதனால், பள்ளி குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக, பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
இந்த பகுதியில், ஜே.சி.கே., நகர், கரிமேடு, களத்துமேடு உள்ளிட்ட பகுதிகளில், 2,000த்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும், மேம்பாலம் வழியாக, தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
அங்குள்ள பழங்கால அகழியில், பிளாஸ்டிக் குப்பை கழிவுகள், இறைச்சி கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுவதால், இந்த பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது.
அதுமட்டுமின்றி, குப்பைக்கு தீ வைத்து எரிப்பதால், அந்த புகையால் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு, கடுமையான பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, செங்கல்பட்டு நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம், இந்த பகுதியில் குப்பை கொட்டப்படுவதை தடுத்து நிறுத்தி, முறையாக குப்பையை தரம் பிரித்து மறுசுழற்சி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.