/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வரத்து அதிகரிப்பு பூண்டு விலை ரூ.100 ஆக சரிவு
/
வரத்து அதிகரிப்பு பூண்டு விலை ரூ.100 ஆக சரிவு
ADDED : மார் 09, 2024 11:12 PM
சென்னை:புதிய பூண்டு வரத்து அதிகரித்துள்ளதால், அவற்றின் விலை கிலோ 100 ரூபாயாக குறைந்துள்ளது.
மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில், மலைப் பூண்டு சாகுபடி நடந்து வருகிறது. கடந்தாண்டு, பூண்டு விளைச்சல் குறைந்ததால், விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.
கடந்த ஜனவரியில், கிலோ 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனால், நுகர்வோர் அதிர்ச்சி அடைந்தனர்.
புதிய பூண்டு அறுவடை துவங்கிய நிலையில், அதன் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. இம்மாத துவக்கத்தில், 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட பூண்டு, தற்போது, 100 ரூபாயாக குறைந்துள்ளது.

