/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தொல்லியல் வளாகத்தில் தடுப்பு உயரம் அதிகரிப்பு
/
தொல்லியல் வளாகத்தில் தடுப்பு உயரம் அதிகரிப்பு
ADDED : மார் 12, 2024 08:56 PM

மாமல்லபுரம்,:மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை பாதுகாத்து பராமரிக்கும் தொல்லியல் துறை, சிற்ப வளாகத்திற்கு கம்பி தடுப்பு அமைத்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன், நான்கு அடியில் மட்டுமே தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டிருந்தன.
நாளடைவில், பயணியர் வருகை அதிகரித்ததால், உயரம் குறைவான தடுப்பு பலனளிக்கவில்லை. பயணியர் தடுப்பைத் தாண்டும் சூழல் ஏற்பட்டது.
குன்று வளாகங்களில், இரவில் நுழையும் சமூக விரோதிகள், மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதை தவிர்க்க, முதலில் கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள் ஆகிய வளாகங்களுக்கு, உயரமான தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டன.
மகிஷாசுரமர்த்தினி குடைவரை, பல்லவர் கால கலங்கரை விளக்கம், கோனேரி குடைவரைகள் உள்ளிட்டவை அமைந்துள்ள வளாகத்திற்கு, தற்போது நான்கடி உயரத்திற்கு உள்ள தடுப்பு கம்பிகளை, மேலும் இரண்டு அடி உயர்த்த, தொல்லியல் துறை முடிவெடுத்து, தற்போது பணிகளை துவக்கியுள்ளது.

