/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் கோப்பை வென்றது 'இந்தியா சி' அணி
/
மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் கோப்பை வென்றது 'இந்தியா சி' அணி
மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் கோப்பை வென்றது 'இந்தியா சி' அணி
மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் கோப்பை வென்றது 'இந்தியா சி' அணி
ADDED : ஆக 12, 2025 10:59 PM

மேல்மருவத்துார்: தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் கிரிக்கெட் போட்டி, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவ கல்லுாரி விளையாட்டு அரங்கில் நடந்தது.
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவ கல்லுாரி விளையாட்டு அரங்கில், தேசிய அளவிலான 'அம்மா ட்ராபி - 2025' மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் கிரிக்கெட் போட்டிகள், கடந்த 8ம் தேதி துவங்கி இரு நாட்கள் நடந்தன.
இந்த கிரிக்கெட் போட்டியில், 'இந்தியா ஏ, இந்தியா பி, இந்தியா 'சி' என்ற மூன்று அணிகள் பங்கேற்றன .
இறுதி போட்டியில், இந்தியா பி அணி, இந்தியா சி அணியுடன் மோதியது. இதில், இந்தியா சி அணி வெற்றி பெற்று, முதல் இடத்தை பிடித்தது. இந்தியா பி அணி இரண்டாம் இடத்தை பிடித்தது.
இதைத்தொடர்ந்து, ஆதிபராசக்தி அறநிலையத்துறை துணை தலைவர் அன்பழகன் தலைமையில், பரிசளிப்பு விழா நடந்தது.
மதுராந்தகம் டி.எஸ்.பி., மேகலா பங்கேற்று, கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு வெற்றிக் கோப்பை, சான்றிதழ் மற்றும் முதல் பரிசாக 1 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 50,000 ரூபாயும் வழங்கினார்.