/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் கடைகளை திறக்க வலியுறுத்தல்
/
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் கடைகளை திறக்க வலியுறுத்தல்
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் கடைகளை திறக்க வலியுறுத்தல்
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் கடைகளை திறக்க வலியுறுத்தல்
ADDED : மார் 02, 2024 12:02 AM
கூடுவாஞ்சேரி:கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பேருந்து நிலைய வளாகத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளை, பேருந்து நிலையம் திறப்பதற்கு முன்பாகவே ஏலம் விடப்பட்டு, ஏலத்தில் எடுத்து உரிய முன்வைப்பு தொகை செலுத்தியவர்களுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதில், சில கடைகள் மட்டுமே தற்போது திறக்கப்பட்டுள்ளன. மற்ற கடைகள் திறக்கப்படாததால், பயணியர் அத்தியாவசிய பொருட்கள் வாங்கக்கூட சிரமப்படுகின்றனர்.
இது குறித்து, உள்ளூர் வணிகர்கள் கூறியதாவது:
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், கடைகளை ஏலம் எடுத்தவர்கள் கடையை திறந்து நடத்தாமல், அதிக முன்வைப்பு தொகை மற்றும் அதிக வாடகைக்கு உள்ளூர் வணிகர்களிடம் பேரம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் கேட்கும் பெருந்தொகை வாடகை கொடுத்து, கடையை நடத்த முடியுமா என்ற அச்சத்தில், உள்ளூர் வணிகர்கள் கடை எடுப்பதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால், ஏற்கனவே ஏலத்தில் கடைகளை எடுத்தவர்கள், கடையை திறக்காமல் வைத்துள்ளனர்.
எனவே, கடைகள் உரிமம் பெற்றும், இன்னும் திறக்காமல் இருக்கும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து, உள்ளூர் வணிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அனைத்து கடைகளையும் திறக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

