/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீரபோகத்தில் புதிய ரேஷன் கடை கட்ட வலியுறுத்தல்
/
வீரபோகத்தில் புதிய ரேஷன் கடை கட்ட வலியுறுத்தல்
ADDED : டிச 21, 2025 05:36 AM

செய்யூர்: வீரபோகம் கிராமத்தில் ரேஷன் கடை கட்டடம் சேதமடைந்துள்ளதால் , புதிய ரேஷன் கடை கட்ட வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பவுஞ்சூர் அருகே வீரபோகம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ரேஷன் கடை செயல்பட்டு வந்தது, இதில் 260க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்தனர்.
இங்கு, 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வந்ததால், பராமரிப்பு இன்றி நாளடைவில் கட்டடத்தின் சுவர்கள் விரிசல் அடைந்து, மேல் தளத்தில் சிமென்ட் பூச்சு உதிர்ந்து மோசமான நிலையில் இருந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அருகே உள்ள கிராம சேவை மைய கட்டடத்திற்கு ரேஷன் கடை மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.
ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பழைய ரேஷன் கடை கட்டடத்தை அகற்றி, அதே இடத்தில் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

