/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு கலை கல்லுாரியில் இளங்கலை படிப்பு வரும் 27க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
/
அரசு கலை கல்லுாரியில் இளங்கலை படிப்பு வரும் 27க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
அரசு கலை கல்லுாரியில் இளங்கலை படிப்பு வரும் 27க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
அரசு கலை கல்லுாரியில் இளங்கலை படிப்பு வரும் 27க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
ADDED : மே 15, 2025 09:17 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கல்லுாரியில், இளங்கலை முதலாமாண்டு சேர, வரும் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டில், ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரியில், 2025 - 26ம் கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு இளநிலை பாடப் பிரிவுகளுக்கான தமிழ் வழி, ஆங்கில வழி சுழற்சி- 1, சுழற்சி - 2ல் படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இங்கு, இளங்கலை பாடப்பிரிவுகளான தமிழ், ஆங்கிலம், வரலாறு, அரசியல் அறிவியல், வணிகவியல், வணிக நிர்வாகவியல் மற்றும் இளம் அறிவியல் பாடப்பிரிவுகளான கணிதவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம், கடந்த 7ம் தேதி துவங்கியது. வரும் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு கல்லுாரி கல்வி இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
வரும் 27ம் தேதி வரை, மாணவ - மாணவியர் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இக்கல்லுாரியில், மாணவர்கள் இணைய வழி விண்ணப்பித்தல் தொடர்பாக தகவல்களை பெற மாணவர் உதவி மையம், கல்லுாரி வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்க, விண்ணப்ப மற்றும் பதிவு கட்டணம் 50 ரூபாய். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்கள் பதிவு கட்டணம் 2 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என, கல்லுாரி முதல்வர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.