/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாணவர்களுக்கு அறிவுத்திறன் போட்டி
/
மாணவர்களுக்கு அறிவுத்திறன் போட்டி
ADDED : டிச 29, 2024 08:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் டாக்டர் அப்துல் கலாம் நடமாடும் நுாலகம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், நுாலக புத்தகங்களின் பயன்கள் மற்றும் நான் படித்த புத்தகம் ஆகிய தலைப்புகளில் பேச்சு, கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
போட்டியில் வெற்றிபெற்றவர்கள் மற்றும் பங்கேற்றவர்களுக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.
அதேபோல், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.

