/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாணவர்களுக்கு அறிவுத்திறன் போட்டி
/
மாணவர்களுக்கு அறிவுத்திறன் போட்டி
ADDED : ஜூலை 28, 2025 11:38 PM

திருப்போரூர்,திருப்போரூர் கிளை நுாலக வாசகர் வட்டம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு அறிவுத்திறன் போட்டி நடத்தப்பட்டது.
காமராஜர் பிறந்தநாளையொட்டி, திருப்போரூர் கிளை நுாலக வாசகர் வட்டம் சார்பில், எவர்கிரின் மெட்ரிக் பள்ளி வளாகத்தில், பள்ளி மாணவர்களுக்கு அறிவுத் திறன் போட்டி நடந்தது.
இதில், நுாலக வாசகர் வட்டத்தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார்.
இப்போட்டியில், திருப்போரூர் வட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 256 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
பேச்சு, கட்டுரை, மாறுவேடம், ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.அனைத்து போட்டிகளிலும், முதல் இரண்டு இடங்களைப் பிடித்த 19 மாணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.