/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அண்டவாக்கம் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகளை பாதுகாக்கும் பணி தீவிரம்
/
அண்டவாக்கம் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகளை பாதுகாக்கும் பணி தீவிரம்
அண்டவாக்கம் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகளை பாதுகாக்கும் பணி தீவிரம்
அண்டவாக்கம் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகளை பாதுகாக்கும் பணி தீவிரம்
ADDED : செப் 26, 2024 12:41 AM

மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டத்தில், நடப்பாண்டு குருவை சாகுபடியில், ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் நெல் விவசாயம் செய்யப்பட்டது.
இதில், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், அதிக அளவு, நெல் விவசாயம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பாக, நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
அவ்வாறு, செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில், 49 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை சேமிக்க, மதுராந்தகம் அடுத்த அண்டவாக்கம் பகுதியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில், திறந்தவெளி சேமிப்புக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த திறந்தவெளி சேமிப்பு கிடங்கில், தரைப்பகுதியில் கற்கள் மற்றும் சவுக்கு கட்டை கொண்டு அடுக்கப்பட்டு, பின் நெல் மூட்டைகளை அடுக்கி, தார்ப்பாய் கொண்டு மூடி பாதுகாத்து வருகின்றனர்.
தற்போது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக, 40 கிலோ எடை கொண்ட, 2 லட்சம் மூட்டைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒரு குவியத்திற்கு, 3,239 மூட்டைகள் அடுக்கி, தார்ப்பாய்கள் மூடி பாதுகாக்கப்படுகிறது.
அவ்வாறு, 85 குவியங்கள் அமைக்கப்பட்டு, 10 லட்சம் டன் நெல் மூட்டைகள் பாதுகாக்கப்பட்டு உள்ளன என, அதிகாரிகள் தெரிவித்தனர்.