/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சர்வதேச சுற்றுலா தினவிழா மாமல்லையில் கொண்டாட்டம்
/
சர்வதேச சுற்றுலா தினவிழா மாமல்லையில் கொண்டாட்டம்
ADDED : செப் 28, 2025 12:29 AM

மாமல்லபுரம்:சர்வதேச சுற்றுலா தின விழா, மாமல்லபுரத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.
உலக நாடுகளில், சர்வதேச சுற்றுலா தினமாக, செப்., 27ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
இந்நாளான நேற்று, சுற்றுலா இடமான மாமல்ல புரத்தில், தமிழக சுற்றுலாத் துறையினர், சுற்றுலா, நிலையான மாற்றம் என்ற தலைப்பில் விழா கொண்டாடினர்.
சப் - கலெக்டர் மாலதி ெஹலன், நகரமன்ற தலைவர் வளர்மதி, சுற்றுலா அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் கடற்கரை கோவில் பகுதியில், சர்வதேச பயணியருக்கு மலர்மாலை அணிவித்து, வரவேற்றனர்.
தமிழக நாட்டுப்புற கலைஞர்கள் கிராமிய நடனங்கள், ராஜஸ்தான் மாநில கலைஞர்கள் நடனம் ஆடினர். பயணியர் உற்சாகத்துடன் நடனமாடி மகிழ்ந்தனர்.
விநாயகா நாட்டியாலயா மீனாட்சி ராகவன் குழுவினர் பரதநாட்டியம், ருத்ராக் ஷா டான்ஸ் அகாடமி அரவிந்த் குமார் குழுவினர் நாட்டுப்புற கலைகள் நிகழ்த்தினர்.
பேச்சு, கட்டுரை, ஓவியம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.