/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லையில் களைகட்டும் சர்வதேச பயணியர் சுற்றுலா
/
மாமல்லையில் களைகட்டும் சர்வதேச பயணியர் சுற்றுலா
ADDED : ஜன 08, 2025 10:31 PM

மாமல்லபுரம்:: மாமல்லபுரத்தில், சர்வதேச பயணியர் அதிகம் குவிவதால், சுற்றுலா களைகட்டுகிறது.
மாமல்லபுரத்தில், சிறப்பு வாய்ந்த பல்லவர் கால பாரம்பரிய சிற்பங்கள் உள்ளன.
இந்திய பயணியர், ஆண்டு முழுதும் இவற்றை கண்டு ரசிக்கின்றனர். வெளிநாட்டு பயணியரை பொறுத்தவரை, அந்தந்த பகுதி காலநிலை, விடுமுறை சூழலுக்கேற்ப இந்தியாவிற்கு சுற்றுலா வருகின்றனர்.
பெரும்பாலும் நவம்பர் -- மார்ச் மாதங்களில் குழுவாகவும், குடும்பத்தினருடனும், தனிநபராகவும் தென்னிந்திய சுற்றுலா வருவர்.
இந்திய பிரதமர் மோடி -- சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகியோர், கடந்த 2019ல், மாமல்லபுரத்தில் சந்தித்தனர்.
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, கடந்த 2022ல் நடந்தது. இந்நிகழ்வுகள் உலக நாடுகளை கவர்ந்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் சர்வதேச பயணியர், மாமல்லபுரத்தில் அதிக அளவில் குவிகின்றனர்.
இந்நிலையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணியர் சீசன், தற்போது துவங்கியுள்ளது. தற்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாட்டு பயணியர், பல குழுக்களாக படையெடுத்து வந்து, மாமல்லபுரம் பல்லவர் கால சிற்பங்களை ரசிப்பதால், சுற்றுலா களைகட்ட துவங்கியுள்ளது.