/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
10 ஜோடிக்கு இலவச திருமணம் பதிவு செய்ய அழைப்பு
/
10 ஜோடிக்கு இலவச திருமணம் பதிவு செய்ய அழைப்பு
ADDED : ஜூன் 12, 2025 11:21 PM
திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், தமிழக அரசின் திருமண திட்டத்தில், 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட உள்ளது. விரும்புவோர் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில், துறை சார்பில், 60,000 ரூபாய் செலவில், திருமணம் நடத்தும் திட்டம் அமலில் உள்ளது.
அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், வரும் ஜூலை 2ம் தேதி, 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதில் விருப்பம் உள்ளவர்கள், கோவில் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இத்திருமண திட்டத்தில், 60,000 ரூபாய் மதிப்பில், மணமக்களுக்கு 4 கிராம் எடையில் தங்க திருமாங்கல்யம், மணமகன், மணமகளுக்கு ஆடை, மாலை, மெத்தை, பீரோ, கட்டில், தலையணை, பாய், கை கடிகாரம், மிக்ஸி, பூஜை பொருட்கள், பாத்திரங்கள், மணமக்கள் வீட்டினர், 20 பேருக்கு அறுசுவை விருந்து உள்ளிட்டவை வழங்கப்படும்.
தகுதி வாய்ந்த நபர்கள், கந்தசுவாமி கோவிலில் உள்ள ஹிந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தை அணுகி, பதிவு செய்து கொள்ளலாம் என, கோவில் செயல் அலுவலர் குமரவேல் தெரிவித்து உள்ளார்.