/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மீனவர்கள் கால்வாயை கடக்க இரும்பு நடைபாலம் அமைப்பு
/
மீனவர்கள் கால்வாயை கடக்க இரும்பு நடைபாலம் அமைப்பு
மீனவர்கள் கால்வாயை கடக்க இரும்பு நடைபாலம் அமைப்பு
மீனவர்கள் கால்வாயை கடக்க இரும்பு நடைபாலம் அமைப்பு
ADDED : டிச 15, 2025 05:53 AM

புதுப்பட்டினம்: கல்பாக்கம் மீனவ பகுதிகளில், மயானத்திற்குச் செல்ல, பகிங்ஹாம் கால்வாயில் இரும்பு நடைபாலம் அமைக்கப்படுகிறது.
கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் ஊராட்சி மீனவர் பகுதி, வாயலுார் ஊராட்சிக்கு உட்பட்ட உய்யாலிகுப்பம் மீனவர் பகுதி என, அடுத்தடுத்து உள்ளன.
இரண்டு பகுதிகளின் தனித்தனி சுடுகாடுகள், இங்கு கடக்கும் பகிங்ஹாம் கால்வாய்க்கு மறுபுறம் உள்ளன.
இப்பகுதியினர், அவரவர் பகுதியில் கால்வாயை துார்த்து, நடைபாதை அமைத்து, சுடுகாடு பகுதிக்குச் சென்றனர். இந்நிலையில், கல்பாக்கம் அணுசக்தி நிர்வாகம், புதுப்பட்டினம் பகுதி கால்வாயில் இரும்பு நடைபாலம் அமைத்து, புதுப்பட்டினம் பகுதியினர் பயன்படுத்தினர்.
நாளடைவில், பாலம் சேதமடைந்த நிலையில், இரண்டு பகுதியினரும் தனித்தனி நடைபாலம் அமைக்க கோரி, அணுசக்தி துறையினரிடம் தொடர்ந்து வலியுறுத்தினர்.
அத்துறையும் பரிசீலித்து, பொதுப்பணி சேவைகள் பிரிவின் கீழ், முதலில் புதுப்பட்டினத்தில் இரும்பு நடைபாலம் அமைத்து, உய்யாலிக்குப்பத்திலும் அமைத்து வருகிறது.

