தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ 'மெட்ரோ' ரயில் பணியின் போது திடீரென சரிந்த இரும்பு துாண்

'மெட்ரோ' ரயில் பணியின் போது திடீரென சரிந்த இரும்பு துாண்

'மெட்ரோ' ரயில் பணியின் போது திடீரென சரிந்த இரும்பு துாண்


UPDATED : ஆக 19, 2026 08:59 PM

ADDED : ஆக 19, 2026 08:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 19, 2026 08:59 PM ADDED : ஆக 19, 2026 08:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்போரூர்:சிறுசேரியில் மெட்ரோ ரயில் பணிக்காக கட்டப்பட்டு வரும் இரும்பு துாண் வளையம், திடீரென நேற்று சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

சென்னையில் இரண்டாம் கட்டமாக, மூன்று வழித்தடங்களில் 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 119 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இதில், மாதவரம் -- சிறுசேரி வழித்தடத்தில், கேளம்பாக்கம் அடுத்த ஏகாட்டூர் - ஓ.எம்.ஆர்., சாலையில் இருந்து சிறுசேரி சிப்காட் செல்லும் சாலை இடையே மெட்ரோ ரியல் திட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இப்பணிக்காக கட்டப்பட்டு வந்த இரும்பு துாண் வளையம் நேற்று திடீரென சரிந்து விழுந்தது.

பாதுகாப்பு தடுப்புக்குள் சரிந்து விழுந்ததால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. சுதாரித்த மெட்ரோ பணி ஊழியர்கள், உடனே சரிந்து விழுந்த இரும்பு துாண் வளையத்தை அகற்றினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துாண் தரமாக கட்டப்பட்டவில்லையா அல்லது இரும்பு துாணில் உள்ள வளையங்கள் ஏதேனும் திருடப்பட்டு பலவீனமடைந்து சரிந்து விழுந்ததா என மக்கள் இடையே சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us