/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிலம்பம் போட்டி தீர்ப்பு வழங்குவதில் முறைகேடு மேலக்கோட்டையூரில் மாணவர்கள் கொதிப்பு தற்கொலை முயற்சியால் பதற்றம்
/
சிலம்பம் போட்டி தீர்ப்பு வழங்குவதில் முறைகேடு மேலக்கோட்டையூரில் மாணவர்கள் கொதிப்பு தற்கொலை முயற்சியால் பதற்றம்
சிலம்பம் போட்டி தீர்ப்பு வழங்குவதில் முறைகேடு மேலக்கோட்டையூரில் மாணவர்கள் கொதிப்பு தற்கொலை முயற்சியால் பதற்றம்
சிலம்பம் போட்டி தீர்ப்பு வழங்குவதில் முறைகேடு மேலக்கோட்டையூரில் மாணவர்கள் கொதிப்பு தற்கொலை முயற்சியால் பதற்றம்
ADDED : செப் 19, 2024 11:58 PM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த மேலக்கோட்டையூர் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை வளாகத்தில், 2024- - 25ம் ஆண்டிற்கான, முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள், கடந்த 10ம் தேதி துவங்கின.
இதில், 12 முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவ - மாணவியரும், 17 முதல் 25 வயது வரை உள்ள கல்லுாரி மாணவ - மாணவியரும், 15 முதல் 35 வயது வரை பொதுப் பிரிவினரும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களும் என, 5 பிரிவுகளின் கீழ், 27 விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன.
இதில், கல்லுாரி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள், கடந்த 16ம் தேதி துவங்கி, நேற்றுடன் நிறைவடைந்தன.
நேற்று முன்தினம் நடந்த சிலம்பம் போட்டியில், நடுவர்கள் சரியான முறையில் தீர்ப்பு கூறவில்லை எனக்கூறி, மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இப்போட்டியில், 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இதில், 18 வயது கல்லுாரி மாணவி ஒருவர், சிலம்பம் போட்டி யில் விளையாடிய போது, அங்கிருந்த நடுவர்கள் சரியான முறையில் தீர்ப்பு சொல்லவில்லை எனக்கூறி வாக்குவாதம்செய்தார்.
இதற்கிடையில், அந்த பயிற்சி கூடத்தில் இருந்த, 30 அடி ஏணி படிக்கட்டு ஒன்றில் ஏறி, அந்த மாணவி தற்கொலை செய்து கொள்வதாக கூறினார். உடனே, அங்கிருந்தவர்கள் ஏணி படிக்கட்டில் ஏறி, மாணவியை பாதுகாப்பாக கீழே இறக்கினர். அப்போது, மாணவியின் பெற்றோர், அவர்களின் பயிற்சியாளர்கள், மற்ற மாணவர்களின் பெற்றோர்களும், நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.
மேலும், நடுவர்களுக்கு சரியான தகுதி இல்லை; விளையாட்டின் வரைமுறை தெரியவில்லை. விளையாட்டில் பங்கேற்றவர்களே, நடுவராகவும் செயல்படுகின்றனர்.
இருக்கும் 40 நடுவர்களில், 6 பேர் தான் தகுதியான நடுவர்கள் என, குற்றச்சாட்டு தெரிவித்தனர். சிலர், போட்டி நடந்த பயிற்சி கூடத்தின் முன், தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
வண்ட லுார் தாசில்தார் புஷ்பலதா, கேளம்பாக்கம் உதவி கமிஷனர் வெங்கடேசன், மாவட்ட விளையாட்டு அலுவலர்கள்உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், நேற்று முன் தினம் நடந்த சிலம்பம் போட்டியை, வரும் 25ம் தேதி மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதை ஏற்றுக்கொண்ட மாணவ - மாணவியர், சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர்.